Friday 11 October 2013

மிஷ்கின்ஜி!! நாங்க தான் " வொர்த்" இல்லியோ??



மிஷ்கின் படங்கள்...ம்ம்...சித்திரம் பேசுதடி அதிகமாகவே "ஜெர்க்" என்னில் கொடுத்த படம்...அது தவிர்த்து...அவரின் "அதீத இண்டெலக்சுவல் அலைகள்" என்னில் புரிதலை கொடுக்காததாலோ...அல்லது...அவருக்கு புரியவைக்க முடியாததாலோ...அட..ஏதோ  ஒன்னு..

அறுந்து போன மெல்லிய நூல்கண்டு மாதிரி ...விலகி தான் இருந்தேன்...
சில இணைய பெருந்தலைகளின் "ஒப்பற்ற" ஓஹோ க்களும்..."ஐயையோ" க்களும் ...

ஓகே...படத்தை பார்த்துட்டேன்...

நினைவில் மிஞ்சி நிற்கும்  சில கேள்விகள்..

1. அமெச்சூர் நாடக பாணியில் சில, பல காட்சிகள் எனக்கு மட்டும் தான் உறுத்தலா?? குறிப்பாய்...முதல் காட்சியில் அந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் ஸ்ரீயிடம் பேசும் உடல் மொழி, வசனம் எல்லாம் ஒய்.ஜி. மகேந்திரன் மேடை நாடக காட்சிகளாக என் கண் முன்னே விரிந்ததுக்கு என்ன காரணம்??

2. என்னவோ லிப்ஸ்டிக் சகிதம் இருக்கும் அந்த குருட்டு பெண் மற்றும் அந்த குருட்டு சிறுமி மேலே சுத்தமா பாவமோ அல்லது இரக்கமோ ..அட எந்த புண்ணாக்கு பீலும்  வந்து தொலையலேயே..:-(  அதுவும் அந்த குருட்டு பெண்ணுக்கு பின்னணி கொடுத்த குரல் என்னவோ எனக்கு பிடிக்கவே இல்லை...:-(

3.மிஷ்கின் கதை சொல்லணும் அப்படிங்கிரதுக்காக அந்த சுடுகாட்டில் அந்த சிறுமி களேபரத்திலும் கதை சொல்ல சொல்றது...அட போங்கப்பா...

4.காமெரா கோணங்கள் பத்தியெல்லாம் இணைய பிரபலங்கள் ஆச்சரியப்பட்டு எழுதிட்டாங்க....நமக்கு அதெல்லாம் புரியாது ..ஆனால்...எனக்கு ஒரு சீன் ரொம்பவே உறுத்தியது...ஸ்ரீயை நடுவிலே உட்கார வச்சு...மிஸ்கின் ஐ போட்டு தள்ளுனு போலீஸ் குரூப் மிரட்டும்போது...காமெரா ஒவ்வொரு ஆளா போயிட்டு போயிட்டு வரும்போது...கல்யாண வீடியோ பார்த்த பீல்...

5.சமுராய் சண்டை எதுக்கு??

6.அப்புறம் ஸ்ரீ,மிஸ்கின் தவிர்த்து...கதாபாத்திரங்களில் ஒரு நாடக தனம் இயல்பை மீறி தெரிவது...

மிஷ்கின் ஜி...ஒருவேளை என்னை மாதிரி ஆளுங்களுக்கு  உங்க படம் பார்க்க 'வொர்த்' இல்லையோ ??

No comments:

Post a Comment