Showing posts with label லெக்கிங்க்ஸ். Show all posts
Showing posts with label லெக்கிங்க்ஸ். Show all posts

Wednesday, 16 October 2013

"லெக்கிங்க்ஸ்"-பெண்களுக்கு ஏற்றதா?இல்லையா?



கலாச்சார மாற்றங்கள் பண்பாடை சாராத நிகழ்வா, இல்லையா என்ற தர்க்கங்களையும் எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு பார்ப்போமென்றால், உடைகள் விஷயத்தில் என்றும் பெண்களுக்கு வெற்றிடம் நிகழ்வதில்லை.

பேஷன் விஷயத்தில் திக்குத் தெரியாமல் ஒரு சாரார் வழி ஏற்படுத்தித்தர, அதை பின் தொடர்ந்து செல்வோர் ஒரு சமுதாய மாற்றத்தையே உலகிற்கு அறிமுகப்படுத்தி(அல்லது) உணர்த்தி விடுகின்றனர் .

80-90 இடைப்பட்ட காலங்களில் தழைத்துச் செழித்திருந்த தாவணிகள் எல்லாம் மாற்றமாகி, சுடிதார் வகை, தொகை இல்லாமல் வந்த காலங்களிலும் உருமாறி பின் வந்த  ஜீன்ஸை எல்லாம் புறத்தே தள்ளிவிட்டு, "லெக்கிங்க்ஸ்" கலாச்சாரத்திற்கு தமிழகம் சமீப காலங்களில் தன்னை தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது .

லெக்கிங்க்ஸ் என்ற உடம்பை இறுக்கி பிடிக்கும் கால் ஆடை  ஐ பேண்ட் என கருதலாமா என்றால் நிச்சயமாக இல்லை...

இந்த மாதிரியான இறுக்கி பிடிக்கும் கால் ஆடைகளை பொதுவாய் ...விளையாட்டுவீரர்கள் உபயோகபடுத்துவர்...காரணம் வெகு சிம்பிள்...

# பனிகாலத்து சூழலில் உடலை கத கதப்பாய் வைத்து கொள்ள உதவும்.

# அதிக கனமான உடைகள் விளையாட்டு வீரர்களுக்கு இடையூறாகவும் இருக்கும்.

மேலும், இந்த லெக்கிங்க்ஸ் பேஷன் மொஹலாய கால பண்பாட்டில் இருந்தது...மொகல் பெண்கள் 'அனார்கலி' எனப்படும் நீண்ட மேல் அங்கி அணிந்து, இந்த லெக்கிங்க்ஸ் கால் உடையை அணிந்து கொள்ளும் பழக்கம் இருந்தது...

லெக்கிங்க்ஸ்...தற்பொழுது நாட்டையே ஆட்டி படைக்கும் இந்த உடையில் அப்படி என்ன இருக்கிறது...?? இது பெண்களுக்கு ஏற்ற உடையா இல்லையா??

முதலில் ஏன் லெக்கிங்க்ஸ் பெண்களுக்கு பிடிக்கிறது என்று யோசித்தால் ,

## "ட்ரெண்டி"யாக இருப்பதால்,

## இன்னும் 'ஸ்லிம் '-ஆக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஆசையால்,

##விலை மலிவால் 

##உடுத்திக் கொள்ள எளிதாக இருப்பதால் 

பிடிக்கிறது என்றால் ஏற்றது என்ற பொருள் இல்லை :-)

அப்படி என்றால் ஏன் பெண்களுக்கு ஏற்றது இல்லை?

1. வைரஸ் தொற்று : இறுக்கமான லெக்கிங்க்ஸ் அணிவதால், காற்றோட்ட குறைவு அபாயம் அதிகம் உள்ளது , இதனால் பெண்களுக்கு வைரஸ்/பாக்டீரியா சம்பந்தப்பட்ட உடல் உள்ளுறுப்பு நோய் தொற்று வரும் அபாயம் அதிகம்.

2.இரத்த ஓட்ட பாதிப்பு: இறுக்கமான லெக்கிங்க்ஸ் அணிவதால், சில பெண்களுக்கு, கால் ரத்த ஓட்டங்களுக்கு அது இடையூறாய் அமையும்.

3.அப்புறம் மிக மிக முக்கியமாய் ஒரு விஷயம்...

உடல் பருமனாய் இருக்கும் பெண்களே...தமிழகமே உங்க காலில் விழுந்து கூட கும்பிடுறோம்...தயவு செய்து லெக்கிங்க்ஸ் போடுற எண்ணத்தை  அப்படியே கடலில் வீசி எறிங்க . முடியலை...எவ்வளவு தான் தாங்குறது :-)

உடம்போடு ஒட்டி இருக்கும் இந்த ஆடையை இவர்கள் அணிந்தால், உடல் தோற்றத்தை/உடல் அங்கங்களை மிகவும் நுணுக்கமாக/ஆபாசமாக பிறர் பார்வைக்கு வெளிப்படுத்தும்.

4. கால் மிகவும் ஒல்லியாக  இருப்பவர்களும் கூட இந்த லெக்கிங்க்ஸ் அணிவதை தவிர்ப்பது நலம். இன்னும் குச்சியாக காண்பித்து விகாரமாக்கும்.

பேஷன் பத்தி தெரியாமல் , புரியாமல் இதுக்கும் கருத்து சொல்ல வந்தாச்சா என்று கூவும் நவயுக யுவதிகளுக்கு சில கோரிக்கைகள் :

# சரியான உயரம், எடை இருப்பவர்கள் மட்டும் அணிவது ஓகே.

# நீளமான குர்தீஸ் அணிந்தால் நாகரிகமாகவும் இருக்கும்.(இடுப்புக்கு கீழே முதல் முழங்கால் வரை)

#சிந்தடிக்,வெல்வெட் வகை   லெக்கிங்க்ஸ்  ஆடைகளை கூடுமானவரை தவிர்த்து விட்டு, சீதோஷ்ண நிலைக்கு தகுந்தவாறு அணிவது நல்லது.

ட்ரெண்டி ஒருவித தன்னம்பிக்கை,உற்சாகத்தை கொடுப்பது என்றாலும், அதுவே ஆபாசமாகி, பிறரின் கேலிப்பார்வைக்கு ஆளாவது, அந்த உற்சாகத்தையே பன்மடங்கு கெடுத்துவிடும் எச்சரிக்கை உணர்வும், நம் உடையின் தோற்றத்தில் தேவை என்பதை உணர்ந்து கொண்டால் நல்லது.